காதல் திருமணம் செய்த தம்பதியின் 2 பெண் குழந்தைகளுக்கு ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி தாலுகா, பாப்பாக்குடி பகுதி-1 கிராமம், பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் விக்டர்(36), சென்னையில் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (33). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்தனர். இத்தம்பதிக்கு ஆரா தமிழனி (5), அக்ஷரா மகிழினி(2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜான்விக்டர் சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது குழந்தைகளுக்கு ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். வருவாய்த்துறையினர் ஆய்வுக்குப்பின் ஜான்விக்டரின் 2 பெண் குழந்தைகளுக்கும் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை தாசில்தார் பாலசுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

Related Stories: