ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: ஈரோடு எஸ்பி ஆபீசில் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த தேவராஜ் மனைவி மயிலாத்தாள் (60). இவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனு: சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். ரூ.1 லட்சம், ரூ.60 ஆயிரம், ரூ.50 ஆயிரம் தொகைக்கான மூன்று ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2,500 என 20 மாதங்களுக்கு செலுத்தினேன். ஏலச்சீட்டு  தொகையை கேட்டபோது, அவரது மகன் படிப்புக்கு செலுத்திவிட்டதாகவும், சில நாட்களில் பணம் தருகிறேன் என்றும் கூறினார். அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு ரூ.2.50 லட்சம்  தேவைப்படுகிறது, அதனை கடனாக கொடுங்கள் எனகேட்டதால் அதையும் கொடுத்தேன். இதேபோல், என்னிடம் மட்டும் அல்லாமல்  சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த 18ம் தேதி வீட்டை காலி செய்து சென்றுவிட்டனர். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: