ஓபிஎஸ்சின் மாஜி உதவியாளர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்துள்ள அன்னபிரகாஷ், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் அரசுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். இவர், ஓபிஎஸ் உதவியாளராகவும், தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் இருந்தவர். அன்னபிரகாஷ் சில நாட்களுக்கு முன்பு எடப்பாடியை சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: