×

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் 51 நாட்களில் 2.5 டிஎம்சி தண்ணீர் வந்தது

ஊத்துக்கோட்டை:  ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 51 நாட்களில் 2.5  டிஎம்சி வந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும். இதில் தற்போது, கண்டலேறு அணையில்  போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.  தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.

மேலும், இந்த வருடம் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு தண்ணீர் ஆந்திர அரசு வழங்காத நிலையில்,  தமிழக  அரசின் கோரிக்கை தொடர்பாக, ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மே மாதம் 5ம்  தேதி காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி 1500  கன அடியாகவும், தற்போது 2 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர்  திறந்து விடப்பட்டது பின்னர், இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை  8ம் தேதி வந்தடைந்தது.  பின்னர், 9ம் தேதி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைந்தது.

மேலும், ஆந்திர விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் எடுத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை தமிழகத்திற்கு விடுகிறார்கள். அதனால்தான், ஆந்திராவில் கண்டலேறு அணையில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தும் தமிழகத்திற்கு  தற்போது ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் 620 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை கடந்த மே மாதம் 8 தேதி முதல் நேற்று 27 தேதி வரை என  51  நாட்களில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Krishna ,Kandaleru dam , Krishna water from Kandaleru dam received 2.5 TMC water in 51 days
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...