பேரண்டூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்: எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்

ஊத்துக்கோட்டை:  பேரண்டூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி  குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் ஜெ.ஜெ 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்க அலுவலகம் உள்ளது. இங்கு  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஜெ. துளசிராமன் தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி. ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வி.பி. ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்  குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா, கூட்டுறவு சங்க செயலாளர் தணிகாசலம் வரவேற்றனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாக ₹41 லட்சத்து  66 ஆயிரத்து 200 வழங்கினார். மேலும், இதர கடனாக  6  பேருக்கு தலா ₹10 ஆயிரம் வீதம் ₹60 ஆயிரம்  என மொத்தம் ₹42 லட்சத்து 26 ஆயிரத்து 200  வழங்கி சிறப்புரையாற்றினார்.

Related Stories: