×

அனுமதியின்றி கலப்பட மணல், எம்.சாண்ட் விற்பனை: கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் மனு அளித்தார். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் முறையான அனுமதியில்லாமல் எம்.சாண்ட் மற்றும் மணல் கிடங்குகள் செயல்பட்டு வருகிறது.

இதில் அதிகமான கிடங்குகளில் சமூக விரோதிகளால் கலப்பட மணல் மற்றும் எம்.சாண்ட் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சிமெண்ட் கலவை நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான ஆலைகளில் தரமற்ற எம்.சாண்ட் முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.

இந்த சிமெண்ட் கலவை ஆலைகளை சோதனை செய்வதற்கோ, கண்காணிப்பதற்கோ அரசு சார்பில் எந்த விதமான குழுக்களும் அமைக்கப்படவில்லை. இதன்மூலம் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக  மணல் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை லாரிகளில் கொண்டு வருவதால் சாலைகளும் பழுதாகிறது. இதனை தடுத்த நிறுத்த போக்குவரத்து காவல் துறை சார்பிலோ அல்லது கனிமவளத்துறை அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : M.Sand , Sale of mixed sand, M.Sand without permission: Complaint to Collector
× RELATED ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான...