ஊத்துக்கோட்டையில் மெகா லோக் அதாலத்: 75 வழக்குகள் தீர்வு

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டையில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. ஊத்துக்கோட்டையில் உள்ளது உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம். இங்கு,  தேசிய அளவிலான சட்டப்பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான  நீதிபதி செந்தமிழ் செல்வன்  தலைமையில் நேற்றுமுன்தினம் மெகா லோக் அதாலத் நடந்தது. இதில், சுமார் 275 வழக்குகள் நிலுவையில் இருந்தது. அதில்  சமரசம் பேசப்பட்டு, 75 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன்,  செயலாளர் மகேந்திரன்,  பொருளாளர் கன்னியப்பன், மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், வெற்றி தமிழன், பாலசுப்பிரமணிய குமார், சாந்தகுமார், சுகுமார் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: