காரில் வைத்து நடந்த கொடூரம்: உ.பி.யில் தாய், மகள் பலாத்காரம்

உத்தரகாண்ட்: லிப்ட் தருவதாக கூறி, தாய், மகளை காரில் பலாத்காரம் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகர் பிரன் காலியர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது 6 வயது மகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு கும்பல், லிப்ட் கொடுப்பது போன்று நடித்து, இருவரையும் காரில் ஏற்றி கொண்டனர். சிறிது தூரம் சென்றதும், ஓடும் காரிலேயே அந்த பெண் மற்றும் அவரது மகளை கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ஒரு ஏரியின் அருகே விட்டுவிட்டு தப்பி சென்றது.

இயைதடுத்து அந்த பெண், போலீசில் புகார் செய்தார். புகாரில், ‘சோனு மற்றும் அவரது நண்பர்கள் காருக்குள் வைத்து எங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்’ என்று புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட இருவரும் ரூர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: