மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு பிட்காயின் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை: மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு பிட்காயின் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். நாகமலை புதுகோட்டையைச் சேர்ந்தவர்களிடம் பிட் காயினில் முதலீடு செய்து தருவதாக கூறி சென்னையை சேர்ந்த கும்பல் மோசடி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த இருதயராஜ் உள்பட 4 பேர் மோசடி செய்ததாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். 

Related Stories: