இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்தது. திரிபுராவில் பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் போட்டியிடட் முதல்வர் மாணிக் சஹா தாம் வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் விதம், பிரதமர் மோடி மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதற்காக மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். உத்தர பிரதேசத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக பல்வேறு உள்ளாட்சித் தேர்தல்களில் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதகவும், அதற்காக வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: