பத்ரா குடியிருப்பு மோசடி விவகாரம்!: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்‍கு அமலாக்‍கத்துறை சம்மன்..!!

மும்பை: மஹாராஷ்ராவில் மகா அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், சிவசேனா செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்துக்‍கு அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நில மோசடி புகாரில் விசாரணைக்‍கு நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களை சஞ்சய்ராவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும், அவர்கள் மும்பை திரும்பும் போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர்கள் வாழும் பிணம் என்றும் சஞ்சய் ராவ்த் விமர்சித்துள்ளார். இந்த நிலையில், சஞ்சய்ராவத்துக்‍கு, அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நில மோசடி புகார் தொடர்பாக நாளை விசாரணைக்‍கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Related Stories: