×

பாக். முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து?: இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி கைது..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இம்ரான்கான் வீட்டில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் இம்ரான்கான் அறையில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தியபோது பிடிபட்டார். அவரை தனி இடத்தில் அடைத்துவைத்த இம்ரான்கான் உதவியாளர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், வீட்டில் பணியாற்றும் நபர்களின் விவரங்களை கொடுக்குமாறு இம்ரான்கானிடம் பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை என்றார். பணியாளர்கள் விவரம் கிடைத்தால் மட்டுமே விசாரணை நடத்த உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். இதனிடையே இம்ரான்கான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவரது கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : PM ,Imran Khan , Imran Khan home, spy, guard, arrested
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...