ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான்: ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, தம்பிதுரை, மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை வழிநடத்த தலைமையை தேர்ந்தெடுப்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 பேர் மட்டுமே வரவில்லை. 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர். வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழல் நிலையில் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு கூட்டம் நடத்த அதிகாரம் உள்ளது. அதிமுக தலைமைச் செயலாளர் பழனிசாமி கூட்டம் நடத்த அதிகாரம் உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கட்சி விதிகளை ஓபிஎஸ் அறியாமல் உள்ளாரா அல்லது அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குவது போல் ஓபிஎஸ் நடிக்கிறார். ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான். ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் தொடருவாரா என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்திருக்கிறார். யாரையும் கட்டாயப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் அழைக்கவில்லை. ஒற்றை தலைமையே கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு. எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: