×

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் ரசாயண உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் சிப்பெட்டில் 59 கோடி ரூபாய் மதிப்பில் தொழில்நுட்ப வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில் சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது என்றார்.

தென் மாநிலங்களில் அதிக சிப்பெட் மையங்களை உருவாகும் வகையில் தூத்துகுடியில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் என்றும் மன்சுக் மாண்டவியா கூறினார். சிப்பெட்டுகளை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அதில் ஒன்று தமிழ்நாடடின் தூத்துக்குடியில் அமைய உள்ளது என்றும் கூறிய அவர், குஜராத், பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் புதிய சிப்பெட்டுகள் அமைய உள்ளன என்று குறிப்பிட்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், கிண்டி சிப்பெட் வளாகத்தை 100 ஏக்கரில் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டார். மக்களை தேடி மருத்துவ திட்டம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லும் வகையிலான சிறப்பான திட்டம் என்று ஒன்றிய அமைச்சர் பாராட்டியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


Tags : New Chiffet Centre ,Thoothukudi ,Union Minister ,Mansuk Mandavia , Thoothukudi, Chippet, Center, Union Minister, Mansuk Mandavia
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...