×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் ரூ.10.02 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  கலந்து கொண்டார். இதில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில், வருவாய் துறையின் சார்பில் 432 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 510 மனுக்களும், பிற துறைகளின் சார்பில் 253 மனுக்களும் என மொத்தம் 1,195 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில், 312 பயனாளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பில்  இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகள், 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 165 பயனாளிகளுக்கு ரூ.18.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், பேரிடர் மற்றும் மேலாண்மை துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் நிவாரண உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகை, குடிசை மாற்று வாரியம் சார்பில் 116 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி, வட்டார வளர்ச்சி துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.14.70 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில்  காதொலி கருவி மற்றும் இலவச செல்போன், 7 பயனாளிகளுக்கு ரூ.32.34 லட்சம் மதிப்பில் பழங்குடியினர் குடியிருப்புகள் என மொத்தம் 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

இதில், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் நித்யா சுகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி, துணை தலைவர் சுரேஷ்குமார், திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பூபாலன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Walajabad Union ,Minister ,Anparasan , 10.02 crore welfare assistance to beneficiaries in Walajabad Union: Minister Anparasan
× RELATED நேற்று வரை அதிமுகவுடன்...