சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணி

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ளநிலையில், அங்கு நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதற்காக, மாமல்லபுரம் பேரூராட்சியில் நடைபாதை அமைப்பது, சாலைகளை சீர் செய்வது, குடிநீர் தொட்டிகளை அமைப்பது, அதிக வெளிச்சம் தரக் கூடிய மின் விளக்கு பொருத்துவது, குளம், குட்டைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில், முதல் கட்டமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் நாடைபாதையில் கற்கள் பதிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

Related Stories: