நாய்க்குட்டியுடன் தனி விமானத்தில் கீர்த்தி சுரேஷ்

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் அவர், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்தார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், ‘நைக்’ என்ற தனது செல்ல நாய்க்குட்டியுடன் தனி விமானத்தில் பயணம் செய்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ‘இது என் செல்லக்குட்டியின் முதல் விமானப் பயணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். விமானத்தில் அவர் எங்கிருந்து எங்கு சென்றார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

Related Stories: