சாதி, மதத்தை கூறி அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள்: செல்லூர் ராஜூ கண்ணீர் பேட்டி

மதுரை:  மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: கட்சிக்குள் ஒரு தலைவர், நிர்வாகியை நீக்குவது சாதாரணம். இது திராவிட பூமி. தந்தை பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண். மாற்று சக்தி இங்கு வரக்கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை அதிமுக கடைப்பிடிக்கிறது. எத்தனையோ சட்ட திட்டங்கள் உள்ள அதிமுகவிற்கு எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார்.

கட்சியில், 80 சதவீதம் தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவருக்குத்தான் கட்சி ஆதரவாக இருக்க வேண்டும் என சட்டதிட்டங்களில் உள்ளது (அழுதபடி பேசினார்). தற்போதைய சூழ்நிலையில் அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சி வசப்படக்கூடாது. சாதி, மதம், இனத்தை சொல்லி அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். அதிமுகவை எந்த மாநில கட்சியாலோ, தேசிய கட்சியாலோ அசைக்கவோ, அழிக்கவோ முடியாது என்று கண்ணீர் மல்க அழுதபடி கூறினார்.

Related Stories: