அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்; மாஜி அமைச்சர் உதயகுமார் தாக்கு

மதுரை: அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ் என மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும். ஒற்றைத்தலைமைக்கு எடப்பாடி இருந்தால்தான் கட்சியை நடத்தி செல்ல முடியும். இபிஎஸ் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

ஜெ.மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை சேர்க்கக்கூடாது. ஜெ.இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை இபிஎஸ் நிறைவேற்றினார். டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் ரகசிய உறவாடி வருகிறார். தொண்டர்களை ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்றும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. காவல்துறைக்கு சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது.

ஓபிஎஸ்க்கு மன உறுதி என்பதே இல்லை. மன உறுதியோடு இருக்கும் இபிஎஸ் தான் தலைமைக்கு சரியான நபர். தொண்டர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பார். தலைமை என்றால் உறுதியோடு அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். அது இபிஎஸ் தான். அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: