இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது  போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடைபெற்றது.

இதில் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 127 ரன்கள் எடுத்து மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் வென்றுள்ளது.

Related Stories: