×

புக்கத்துரை கிராமத்தில் தரிசு நிலங்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துரை கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி தரிசு நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விவசாயத் துறை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சமயமூர்த்தி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில்  புக்கத்துரை  கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட  கோடிதண்டலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். கிராமத்தில் உள்ள 15.47 ஏக்கர் தரிசு நில  விவசாயிகளுடன் கலந்துரையாடி மண் பரிசோதனை ஆய்வு அறிக்கையின்படி தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தோட்டக்கலை பல்லாண்டு பழ பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் தென்னை போன்ற பயிர்களை நடவு செய்து பயனடைய வேண்டும்.

ஆழ்த்துளை குழாய் கிணற்றில் கிடைக்கும் நீரைக் கொண்டு சொட்டு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும். மழை காலங்களில் பழ மர பயிர்களுக்கு இடையில் காய்கறி பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்து பயனடைய வேண்டும். அனைத்து துறை திட்டங்களையும் ஒருங்கிணைத்து திட்ட பயன்களை அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் சென்றடைய வேண்டும். நடப்பு ஆண்டில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 80% நிதியை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அக்கிராம பஞ்சாயத்தை உள்ளடக்கிய அனைத்து குக்கிராம பண்ணைக் குடும்பங்களுக்கும்  பலன் கிடைக்கும் வகையில் இலக்கினை பிரித்தளித்து வழங்க வேண்டும் என்றார். அப்போது பல்ேவறு துறையின் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.




Tags : Commissioner ,Production ,Bukkathurai , In the village of Bukkathurai Commissioner of Agricultural Production inspection of barren lands: Discussion with farmers
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...