கிருஷ்ணகிரி அருகே 9ம் வகுப்பு மாணவனை கடத்தி பெங்களூருவில் விற்ற திருநங்கைகள்: பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டையில் பள்ளிக்கு சென்ற 14 வயது மாணவனை, திருநங்கைகள் பெங்களூருவுக்கு கடத்திச்சென்று விற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமார். இவரது மகன் பாலாஜி(14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 15ம்தேதி பள்ளிக்கு சென்ற பாலாஜி, மாலை வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து குமார் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 இந்நிலையில் மாணவன் பாலாஜியை, அதே பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சிலர் கடத்திச் சென்றது தொியவந்தது. அவர்களிடம் குமார் மற்றும் உறவினர்கள் கேட்டபோது, பாலாஜியை கர்நாடகா பகுதியில் விற்றுவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து குமார் மற்றும் உறவினர்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரித்தனர். அங்கு பாலாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஊருக்கு வந்த  பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டுத்தரக்கோரி நேற்று காலை ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: