குலசேகரத்தில் பரபரப்பு காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த வாலிபர் மர்ம சாவு

* விஷம் குடித்ததால் மரணம் - போலீசார்

* போலீஸ் தாக்கியதால் சாவு - உறவினர்கள்

குலசேகரம்:  குலசேகரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வாலிபர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த பொன்மனை முல்லைசேரிவிளையை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் அஜித்(23). ஐடிஐ படித்துவிட்டு டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் மீது காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் தகராறு செய்தது தொடர்பாக போலீசார் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 மாதமாக சிறையில் இருந்த இவர் கடந்த 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.  குலசேகரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட சென்று வந்துள்ளார். கடந்த 23ம் தேதி கையெழுத்திட சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அன்று மாலை காவல் நிலையத்தில் இருந்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அஜித்தின் தந்தை சசிகுமாரிடம், மகன் விஷம் அருந்தியதால் ஆசாரிபள்ளம் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அஜித் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.  அஜித்தின் தந்தை சசிகுமார், காவல் நிலயத்தில் கையெழுத்திட சென்ற மகனை போலீசார் தாக்கியதால் தான் இறந்திருப்பார், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்ைக எடுக்கவேண்டும் என்று எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். இது குறித்து முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.போலீஸ் தரப்பில், 23ம் தேதி கையெழுத்திட வந்த அஜித் உளறியவாறு காவல்நிலையம் முன் நின்றுகொண்டு இருந்தார். ேபாலீசார் பலமுறை கூறியும் செல்லாமல் நின்ற அவர், தான் விஷம் குடித்ததாக கூறினார். இதனால் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அனுப்பப்பட்டார் என்று தெரவித்துள்ளனர். தக்கலை டிஎஸ்பி கணேசன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: