முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாளில் சமூகநீதி எனும் ஒளியை பரவ செய்வோம்: முதல்வர் உறுதி

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளில் சமூகநீதி எனும் ஒளியை எங்கும் பரவச்செய்ய உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கல்வி-வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் பிறந்தநாளான இன்று சமூகநீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: