3 கோடி காரை வாங்கிய அஜித்

லண்டன்: ஐரோப்பா நாடுகளில் பைக் பயணத்துக்கு நடுவே அஜித் குமார், இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று அங்கு உள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். மெக்லாரன் நிறுவனம், பார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். மெக்லாரன் 2018 720S காரின் அருகில் அஜித் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய். இந்த காரை அஜித் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் 61வது படம் தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்காக 47 நாட்கள் தொடர்ந்து ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில்தான் அஜித் பங்கேற்க உள்ளார்.

Related Stories: