அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து சட்டமன்ற தொகுதிகளில் நாளை காங். ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் வரும் 27ம்தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அது ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.

இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வரும் 27ம்தேதி (நாளை) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் ஒன்றிய பாஜ அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: