×

மரம் விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு: டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: மரம் விழுந்து பலியான வாணி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:சென்னை கே.கே.நகரில் நேற்று முன்தினம் மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம். இதற்கேற்றார்போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன் பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடு இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Tags : DTV.Dhinakaran , The tree fell victim Compensation for family: DTV.Dhinakaran claim
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்