சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணி மண்டபம்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும் எனபாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பல தடைகளையும் தகர்த்து மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியதால் தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

வி.பி.சிங் மட்டும் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் இருந்திருந்தால், உயர்வகுப்பு மக்களின் முழுமையான ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றி பிரதமராக தொடர்ந்திருக்கலாம்.  அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணிமண்டபமும் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: