சைதாப்பேட்டை மயானபூமியில் பராமரிப்பு பணிக்காக மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள காரணத்தினால், 27.06.2022 முதல் 05.07.2022 வரை சைதாப்பேட்டை மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் மேற்கண்ட நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள கண்ணம்மாபேட்டை மற்றும் நெசப்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Stories: