வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம்

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஜூலை மாதம் 2ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் இரவீஸ்வரர் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு வியாசர்பாடியில் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா சென்று பக்தர்களுக்கு  அருள்பாலிக்கின்றார்.

இந்த நிலையில், தேர்த் திருவிழா தொடர்பாக இரவீஸ்வரர் கோயில் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று மாலை 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.சேகர் எம்எல்ஏ தலைமை வகித்தார். பெரம்பூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, கவுன்சிலர்கள் ஆனந்தி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஹரிபாபு, மாநகராட்சி  பொறியாளர் பாபு, குடிநீர் மற்றும்  கழிவுநீர் வாரிய  செயற்பொறியாளர் அசோக் குமார், இன்ஸ்பெக்டர் சதீஷ் தீயணைப்பு துறை செல்வம் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், கோயில் ஊழியர்கள் சிவக்குமார், சிவாச்சாரியர்  நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேர்த் திருவிழாவை சிறந்த முறையில் நடத்துவது குறித்தும் தேர் ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது மற்றும் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பெரம்பூர் தாசில்தார் தலைமையில், தேர்த் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: