திருத்தணியில் உள்ள கல்லூரியில் காவல்துறை பணியிடங்களுக்கு பெண்களுக்கு எழுத்து தேர்வு

திருத்தணி: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில், காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தாலுகா ஆயுதப்படை ஆண், பெண் மற்றும் திருநங்கை பதவிகளுக்கான தேர்வு இன்று நடத்தப்பட்டது. இதன்படி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இருந்து 939 பெண்கள் தேர்வு எழுதுவதற்கு திருத்தணி அருகே உள்ள ஜிஆர்டி பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பெண்கள் வந்திருந்தனர்.

அவர்கள் கொண்டுவந்திருந்த அனைத்து சான்றிதழ்களும் சரிபார்த்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில பெண்கள், கைக் குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த கணவர் மற்றும் உறவினர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: