முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள்: ராமதாஸ் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க  ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 92வது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை!

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் விபிசிங்  பிறந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: