ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் லாபக்காய் பெறாமல் தேங்காய் கொள்முதல்-தனி அலுவலர் செயலர் தகவல்

விருதுநகர் : விருதுநகர் வேளாண் விற்பனைக்குழு தனி அலுவலர் ரமேஷ், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்

விருதுநகர் வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும், ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மத்திய அரசின் ‘இ.நாம்’ (e-NAM) திட்டத்தின் கீழ், தேங்காய்களுக்கு எந்த லாபக் காய்களும் இல்லாமல் கொள்முதல் செய்யப்படுகிறது. ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் தங்களது தேங்காய்களை விற்பனை செய்து லாபம் அடைந்து வருகின்றனர்.   

இ.நாம் (e-NAM) திட்டத்தில் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3,885.46 குவிண்டால் அளவுள்ள வேளாண் விளைபொருட்களை ரூ.75.22 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செயப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 869.55 குவிண்டால் தேங்காய் மற்றும் 30.49 குவிண்டால் கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விலை ஆதார திட்டத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90 குறைந்த பட்ச ஆதார விலையில் ‘நபீட்’ (NAFED) மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 ஜூலை 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 138 குவிண்டால் கொப்பரை தேங்காய்களை ரூ.14.61 லட்சம் மதிப்பில், கொள்முதல் செய்யப்பட்டு 24 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது உற்பத்தி செய்த தேங்காய்களை லாபக்காய் இல்லாமல் பி.எஸ்.எஸ். திட்டத்தின் மூலம் விற்பனை செய்யவும், கொப்பரை தேங்காய்களை குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்ய ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி கண்காணிப்பாளரை 04563-222615, செல்போன் 9952341770 எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: