×

ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் வைக்க அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா பேட்டி

திருமலை : ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்தை பிரித்து புதிதாக டாக்டர் அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் அமைச்சரின் வீடு, பேருந்துகள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது. இதன்பிறகு ஒரு மாதம் ஆனாலும் அமலப்புரம் நகரில் 144 தடை உத்தரவு உள்ளது. இந்தநிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என வைத்து நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ​​அமைச்சரவை கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:₹15,000 கோடியில் பசுமை எரிசக்தி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதம் ஜெகன் அண்ணா வித்யா காணிக்கை,  வாகன மித்ரா மற்றும் காப்பு நேஸ்தம் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 3,530 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ₹15 ஆயிரம் கோடி முதலீட்டில் அதானி குழுமத்தின் கீரின் எனர்ஜி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குத்தகை விடப்பட்ட கோயில் நிலங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்.அர்ஜூனா விருது பெற்ற ஜோதி சுரேகாவுக்கு குரூப்-1 துணை கலெக்டராக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜெகன் அண்ணா எம்.ஐ.ஜி. லேஅவுட்கள் மேம்பாட்டுக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு, டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் வைப்பது, பழைய மாவட்டங்களின் ஜில்லா பரிஷத் தலைவர்கள் பெயர் தொடர்வதற்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உலக பேட்மிண்டன் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், கர்னூலைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஷேக் ஜாஃப்ரின் (20) ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்று சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆந்திரப் பிரதேசத்தின் கவுரவத்தை உயர்த்திக் காட்டியதற்காக ஸ்ரீகாந்த் மற்றும் ஜாப்ரின் ஆகியோரை முதல்வர் ஜெகன்மோகன்   பாராட்டி ஷேக் ஜாப்ரின்  தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர்  ஆந்திர பேட்மிண்டன் சங்கம் சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் பேட்மிண்டன் கிட் ஒன்றை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா, விளையாட்டு துறை தலைவர் பைரெட்டி சித்தார்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Cabinet ,Konaseema district ,Andhra Pradesh ,Dr. ,Ambedkar ,Konaseema , Thirumalai: The newly formed Konaseema district will be renamed as Ambedkar Konaseema district at the Andhra Pradesh Cabinet meeting.
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...