வேப்பூர் அருகே நிலத்தில் கோயில் மணி கண்டெடுப்பு- கருவூலத்தில் ஒப்படைப்பு

வேப்பூர் : வேப்பூர் அடுத்த கோ கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது நிலத்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சமன் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நிலத்திலிருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள பெரிய கோயில் மணி ஒன்று கிடைத்துள்ளது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த ராமலிங்கம் இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், துணை வட்டாட்சியர் மஞ்சுளா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மணியை கைப்பற்றி விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: