ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது: கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என ஓபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடப்படாமல் போனது. மேலும், பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் அறிவித்தையடுத்து பொதுக்குழு எந்தவித தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஓ.பன்னிர்செல்வம் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவை பலப்படுத்த தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்கிறார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். முதல்வர் பதவிக்கு வர சசிகலா தேவை. ஆட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் தேவை. அன்றைக்கு 3 அமைச்சர்கள் ஓபிஎஸ் காலில் விழுந்தார்கள்.

முதல்வராக தேர்வான பின் பழனிச்சாமி எப்படி ஊர்ந்து போனார் என எல்லோரும் அறிவர். இன்றைக்கு எல்லோரையும் ஓரங்கட்டி விட்டு, ஒரு கம்பெனி போல கட்சியை நடத்த முற்படுகிறார்கள். எத்தனை சண்முகம் வந்தாலும், ஒன்றும் செய்ய முடியாது. ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். ஓபிஎஸ் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளதாவும் கூறினார்.

Related Stories: