அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் புதிய திருப்பம்: 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்..!

சென்னை: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேலுமணி முறைகேடுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் துணைப்போனதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைப்பற்றியது. ஆதாரங்கள் அடிப்படையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அரசு அதிகாரிகளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க முடிவு செய்துள்ளது. சென்னை, கோவை, மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜய் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வேலுமணி முறைகேடுக்கு உதவியாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர்களாக இருந்த கந்தசாமி மதுசூதனன் ரெட்டி ஆகியோரும் முறைகேடுக்கு உதவியதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், பொறியாளராக இருந்த புகழேந்தியை வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை சுகாதார அதிகாரி செந்தில் நாதன், மேலும் சில அதிகாரிகளை வழக்கில் சேர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாட்டால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டறிந்துள்ளது. வேலுமணி அமைச்சராக இருந்தபோது முறைகேடாக பல நூறுகோடி ரூபாய் டெண்டர் ஒதுக்க அதிகாரிகள் உதவிய ஆவணங்கள் சிக்கின. சாலை மற்றும் தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல உள்ளாட்சி பணிகளில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனுமதி கிடைத்ததும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 அதிகாரிகளை வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆயத்தம் செய்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்ப்பது குறித்து அரசு தீவிர பரிசீலினை செய்து வருகிறது.

Related Stories: