கும்மிடிப்பூண்டியில் திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். முன்னதாக மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் வரவேற்றார். இதில் தலைமை பொறுப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, எம்.எல்.ரவி, சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய நிர்வாகிகள் மஸ்தான், பரத்குமார், நகரச்செயலாளர் அறிவழகன், மாவட்டப்பிரதிநிதி எம்.ஆர்.ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆகியோர்  சிறப்புரையாற்றினர். மேலும் இன்று (சனிக்கிழமை) பொன்னேரியிலும், புதன்கிழமை பெரியபாளையத்திலும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், கிழக்கு ஒன்றிய நிர்வாகி திருமலை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் மோகன்பாபு, கே.வி.லோகேஷ், இளைஞரணி நிர்வாகிகள் அழகிரி, அன்பு, சிலம்பரசன், ராம்பிரசாத், மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: