×

ஆவடி ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி: சுரங்கப்பாதை இல்லாததால் ஆவடி ரயில்வே கேட்டை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க ேவண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவடி ரயில் நிலையம் மார்க்கெட் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து ஆவடி பேருந்து நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்த நகர், உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர்.

அதேபோன்று கோவில்பதாகை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆவடி மார்க்கெட் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு, 50,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றனர். ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடம் என்பதால், கேட் திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல், அவசர அவசரமாக தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். அப்படி சென்றதில், ஓராண்டில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அபாயகரமான முறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் இந்த ரயில்வே பாதையை அடைத்து, ரயில்வே மேம்பாலம், அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை ரயில்வே பாதுகாப்பு படை காவலரை பாதுகாப்பிற்கு இந்த பகுதியில் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Avadi , Motorists crossing the Avadi railway gate dangerously
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!