மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான 4 வாகனங்கள் ஏலம்: கலெக்டர் தகவல்

சென்னை: மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான 4 வாகனங்கள் ஏலமிடப்படுவதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் மூன்று அம்பாஸிடர் வாகனங்கள் ஆகிய நான்கு வாகனங்கள் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. இவ்வாகனங்கள் பழுது ஏற்பட்டு இருப்பு நீக்கம் செய்ய வேண்டி தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை இயக்ககத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவு செய்யப்பட ஆணை பெறப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான கழிவு நீக்கம் செய்யப்பட்ட மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் மூன்று அம்பாஸிடர் வாகனங்கள் ஆகிய நான்கு வாகனங்களை உள்ளது உள்ளபடி ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் முழு விவரங்களை www.tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: