×

தாம்பரம் மாநகரத்தை தூய்மையான மாநகரமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் வலியுறுத்தல்

தாம்பரம்: தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ‘‘தாம்பரம் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் பிரதிமாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி கடந்த  11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது ‘‘என் நகரம், என் பெருமை; என் குப்பை என் பொறுப்பு; என்ற உணர்வோடு பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தடுத்திடவும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என 100 சதவீதம் பிரித்து வழங்கிடவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் விழிப்புணர்வு பணிகள் 15 இடங்களில் நடைபெற உள்ளது.

இதில், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நலச்சங்கங்கள், மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் பள்ளி, கல்லூரி என்எஸ்எஸ், என்சிசி மற்றும் சாரண மாணவ ,மாணவியர்கள்,  வணிக சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தாம்பரம் மாநகரத்தினை தூய்மையான மாநகரமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tambaram ,mayor , The public must cooperate to make Tambaram a cleaner city: the mayor insisted
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...