போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசுரங்கள்: கமிஷனர் வெளியிட்டார்

சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சங்கர் ஜிவால், போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும் என்றும், அந்தந்த காவல் எல்லையில் போலீசார் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள போக்குவரத்து போலீசார் நேற்று பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

Related Stories: