சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை (ஜூன் 26) பிரதோஷம், 28ம் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி நாளை முதல் வரும் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கோயில் நிர்வாகம் கூறுகையில், ‘‘கோயிலில் இரவில் பக்தர்கள் தங்கக்கூடாது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், கோயிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை. ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை’’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: