×

காட்பாடி அருகே கி.பி. 8ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

வேலூர்: காட்பாடி அருகே டி.கே.புரம் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள டி.கே.புரம் கிராமத்தில் கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் புடைப்பு சிற்பம் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த நாணய சேகரிப்பாளர் தமிழ்வாணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த சிற்பம் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த சிலை மிகவும் விசேஷமானது. கையில் செங்கோல் (தண்டலம்) ஏந்தி உள்ளார். இந்த பகுதியின் பெயர் தண்டலகிருஷ்ணாபுரம்(டி.கே.புரம்) என்பதால் சிலைக்கும், கிராமத்துக்கும் தொடர்பு இருக்கலாம். சிபிற்கால பல்லவர்கள் அல்லது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kadbadi ,Kadbadi GP 8th Century Ayanar Sculpture Discover , AD near Katpadi. Discovery of 8th century Ayyanar sculpture
× RELATED சாதாரண மக்களும் பயன்படுத்தும்...