விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அலுவலகம், சுவர் விளம்பரத்தில் ஓபிஎஸ் படம், பெயர் அழித்து எதிர்ப்பு: கட்சியை விட்டு நீக்கக்கோரி கோஷமிட்டனர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கட்சி அலுவலகம், சாலையோர சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ் படம், பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவில் ஓபிஎஸ்சை முற்றிலும் கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையை இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுவர்விளம்பத்தில்கூட அவர் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சி.வி சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்த ஓபிஎஸ் பெயர் மற்றும் அவரது புகைப்படம் அழிக்கப்பட்டது.

அதேபோல், கட்சி அலுவலகம் எதிரே நகர துணை செயலாளர் செந்தில் எழுதி வைத்திருந்த சுவர் விளம்பரங்களிலும் ஓபிஎஸ் பெயர்கள் மீது வெள்ளையடித்து அழித்தனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் படங்களை அழிக்கும்போது நகர செயாளர் ராமதாஸ், துணை செயலாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். கட்சியிலிருந்து நீக்கக்கோரியும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: