பொன்னியின் செல்வன்: தஞ்சை விழா ரத்து

சென்னை: பொன்னியின் செல்வன் படத்துக்காக தஞ்சாவூரில் நடைபெற இருந்த டிரெய்லர் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஸா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகத்தை வெளியிட உள்ளனர். இந்நிலையில் இது சோழர்களின் கதை படம் என்பதால் தஞ்சாவூரில் ஜூலை 1ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்கான பணிகளும் நடந்து வந்தது. இந்நிலையில் திடீரென இப்போது பட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி இணையதளத்திலே படத்தின் டிரெய்லரை வெளியிடவும், ஒரு பாடலை மட்டும் முன்னதாக யுடியூப்பில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Related Stories: