சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு பார்ட்டி கொடுத்த சல்மான்

ஐதராபாத்: சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு சல்மான் கான் ஐதராபாத்தில் பார்ட்டி கொடுத்தார். கபி ஈத் கபி திவாலி என்ற இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இதேபோல் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் கவுரவ வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இதையடுத்து சல்மான் கான், சிரஞ்சீவி, வெங்கடேஷ் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி விருந்து கொடுத்தார். அதில் சல்மான் கானும் பங்கேற்றார்.

இந்நிலையில் கபி ஈத் கபி திவாலி படப்பிடிப்பில் ஐதராபாத்தில் இருந்த சல்மான் கான், திடீரென நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் பவன் ரெட்டியின் பங்களாவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். சல்மானின் புதிய நட்பு வட்டாரத்தில் இந்த இரண்டு ஹீரோக்களும் இணைந்திருப்பது டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: