மாநிலங்களவையில் 5 புதிய எம்பி.க்கு பதவி பிரமாணம்

புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பி.க்கள் 5 பேருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து புதிதாக 5 மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மாநிலங்களவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இவர்கள் பதவியேற்றனர்.

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த  நிரஞ்சன் ரெட்டி, ரயாகா கிருஷ்ணய்யா, தெலங்கானாவில் இருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமதி சார்பில் தேர்வான தாமோதர் ராவ் தேவகொண்டா, பார்த்த சாரதி ரெட்டி, ஒடிசாவை சேர்ந்த நிரஞ்சன் பிஷி ஆகியோர் எம்பி.க்களாக பதவியேற்றனர்.

Related Stories: