மண்ணடியில் காரில் கடத்திய ரூ2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் நேற்று மாலை துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின்பேரில் மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அக்காரின் சீட்டுக்கு அடியே ரகசிய அறையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ2 கோடி ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, காரில் வந்த இருவரையும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தீவிரமாக விசாரித்தார்.

விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (46), நாராயணன் (45) எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ2 கோடி ஹவாலா பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை வருமானவரி துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்,ரூ2 கோடி ஹவாலா பணத்துடன் 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இப்பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர், யாருக்கு சொந்தமானது, எங்கு எடுத்து செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: