×

குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி; 58 நாடுகளில் தாக்கம்,! அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலியாக அவசர நிலையை உலக சுகாதார நிறுவன அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த கூட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களிடம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என தெரிவித்தார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூக பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : World Health Organization , Echo of the spread of monkeypox; Impact in 58 countries! The World Health Organization declared a state of emergency
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...